இன்றைய ராசிபலன் 20-04-2018

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :

மேஷம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். தந்தையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். பிற்பகலுக்கு மேல் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்கள் முரண்டு பிடித்தாலும் விட்டுப்பிடிப்பது அவசியம். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்: வாழ்க்கைத்துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள்.சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக திடீர் பயணம் மேற்கொள்ளவேண்டி வரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

மிதுனம்: தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளை சமாளிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சோர்வாக இருப்பீர்கள். மாலையில் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டு.

கடகம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் அனுகூலம் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்கவேண்டி வரும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

சிம்மம்: தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனையை அதிகாரி ஏற்றுக்கொள்வதுடன், அவரால் சில சலுகைகளும் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி: சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய் வீர்கள். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்துடன் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

துலாம்: திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

விருச்சிகம்: உற்சாகமான நாள். சிந்தனையில் தெளிவு உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் சுபச் செலவுகள் ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சிறு பிரச்னை ஏற்பட்டு சரியாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.

தனுசு: காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். பணவரவு எதிர்பார்த்தபடி இருந்தாலும், எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சிலருக்கு அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அதனால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கித் தொகை வசூலாகும். பணியாளர்கள் முரண்டு பிடிப்பார்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

மகரம்: சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அலுவலகத்தில் பணிகளை உற்சாகமாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்: புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். திடீர் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். உடல் நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச் சுமை இருந்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

மீனம்: மகிழ்ச்சியான நாள். எதிர்பாராத பணலாபம் உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். பிற்பகலுக்கு மேல் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.


COMMENTS

Name

English News,4,Health,1,Jaffna,103,Kandy 2018 Violent,118,Srilanka,207,Videos,58,அழகுக்குறிப்புக்கள்,11,அறிவித்தல்கள்,4,அறிவியல் செய்திகள்,21,ஆலயதரிசனம்,39,ஆன்மீகம்,76,இந்திய செய்திகள்,126,இலங்கை செய்திகள்,1520,இன்றைய ராசிபலன்,86,உலக செய்திகள்,139,உள்ளூராட்சி தேர்தல் -2018,283,ஏனையவை,3,குற்றம்,60,சிரியா,2,சினிமா செய்திகள்,82,சுவாமி விபுலாநந்தர்,4,தினம் ஒரு மருத்துவம்,77,தேர்தல் முடிவு,149,நம்மவர் படைப்பு,9,படத்தொகுப்பு,41,பொழுதுபோக்கு,6,மரண அறிவித்தல்,2,மரு‌த்துவ‌ம்,92,மாத ராசி பலன்,1,யாழ்ப்பாணம்,585,விளம்பரங்கள்,1,விளையாட்டு,21,வேலைவாய்ப்பு,22,ஜோதிடம்,68,
ltr
item
Ulagaseithi.com: இன்றைய ராசிபலன் 20-04-2018
இன்றைய ராசிபலன் 20-04-2018
https://4.bp.blogspot.com/-iw7oClUqsxs/Wtk1veEqKhI/AAAAAAAADt8/9hcMRN4D8y8V7S-Ll-jtp907Xf_UdbL0ACLcBGAs/s640/astrological-remedies-of-Weak-Sun-yarldeepam.jpg
https://4.bp.blogspot.com/-iw7oClUqsxs/Wtk1veEqKhI/AAAAAAAADt8/9hcMRN4D8y8V7S-Ll-jtp907Xf_UdbL0ACLcBGAs/s72-c/astrological-remedies-of-Weak-Sun-yarldeepam.jpg
Ulagaseithi.com
https://www.ulagaseithi.com/2018/04/20-04-2018.html
https://www.ulagaseithi.com/
https://www.ulagaseithi.com/
https://www.ulagaseithi.com/2018/04/20-04-2018.html
true
4155920391893459047
UTF-8
அனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy