சுவாமி விபுலாநந்தரின் குறும்புத்தனம்

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :


மயில்வாகனனார் பாடசாலை செல்லும் காலத்தில் படிப்பிலே கவனம் செலுத்தினார்.

அதேபோல விளையாட்டிலும் அவர் ஆர்வம் உள்ளவராக இருந்தார்.

சிறுபிள்ளைகளிட முள்ள துடுக்குத் தனமும் இவரிடத்தில் நிறைய இருந்தது.

தீக்குச்சியில் இருக்கும் மருந்தைச் சுரண்டியெடுத்து மரத்திலே ஆணியால் துவார மிட்டு அத்துவாரத்தை தீக்குச்சி மருந்தால் நிரப்பி ஆணியை அதில் வைத்து கட்டையால் அடித்தால் 'டமார்' என்ற வெடிச்சத்தம் உண்டாகும்.

இந்தச் சத்தத்தைக் கேட்பது ஆனந்தமாக இருக்கும்.

மயில்வாகனனார் ஒருநாள் இந்த விளையாட்டைச் செய்து விளையாடும் பொழுது மரக்கட்டையில் துவாரம் இடுவதற்குப் பதிலாக அவரது தந்தையாரான சாமித் தம்பியார் சந்தனம் உரைக்கும் சந்தனக்கல்லிலே துவாரமிட்டார்.

தீக்குச்சி மருந்தை அத் துவாரத்தில் வைத்து வெடிக்க வைத்தார். வெடி வழக்கம் போல 'படார்' என்று சத்தம் கேட்டது.

மயில்வாகனனார் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அடுத்த கணம் அவரது நெஞ்சு 'திகீர்' என்றது. காரணம் வெடி வெடித்த தோடு சந்தனக் கல்லும் இரண்டாக வெடித் துப் பிழந்து விட்டது.

தந்தையாரிடம் பயபக்தியாக இருந்தவரான படியால் மயில்வாகனனார் மிகவும் பயந்து போனார். அட்டைப் பள்ளம் என்னும் இடத்திலுள்ள தென்னந் தோட்டத்தைப்பார்த்து வரப் போயிருந்த அவரது தந்தையார் வந்தால் முதுகும் வெடித்து விடுமோ என்று பயந்தார்.

அழ ஆரம்பித்தார் உணவு கூட உண்ணாமல் ஓடிப் போய்ப் படுத்துக் கொண்டார். குழந்தையின் மனதை உணர்ந்தவள் தானே தாய். தனது மகனின் மன நிலையை உணர்ந்த அவரது தாயார், அன்போடு அவரை அரவணைத்தார்.

அப்பா வருவதற்கிடையில் உடைந்த கல்லுக்குப் பதிலாக வேறொரு கல் வாங்கலாம் பயப்படாமல் சாப்பிடு'' என்று தென்பூட்டி உணவு உண்ணக் கொடுத்தார். அதன் பின்புதான் அவரது பயம் தெளிய ஆரம்பித்தது.

''ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்"

COMMENTS

Name

சுவாமி விபுலாநந்தர்,4,
ltr
item
உலக செய்தி : சுவாமி விபுலாநந்தரின் குறும்புத்தனம்
சுவாமி விபுலாநந்தரின் குறும்புத்தனம்
https://3.bp.blogspot.com/-uUhBZ-1opOY/XOBCH7tlQRI/AAAAAAAAABc/UgNW9EQrZC8gy78NLtCstYQFSS4WSbYnQCK4BGAYYCw/s640/03.jpg
https://3.bp.blogspot.com/-uUhBZ-1opOY/XOBCH7tlQRI/AAAAAAAAABc/UgNW9EQrZC8gy78NLtCstYQFSS4WSbYnQCK4BGAYYCw/s72-c/03.jpg
உலக செய்தி
http://www.ulagaseithi.com/2019/05/vilayaatu-pillai-vipulananthar.html
http://www.ulagaseithi.com/
http://www.ulagaseithi.com/
http://www.ulagaseithi.com/2019/05/vilayaatu-pillai-vipulananthar.html
true
4155920391893459047
UTF-8
அனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy