
இக்கிராமத்தில் 1892ம் ஆண்டு மே மாதம் மூன்றாம் திகதி சுவாமி விபுலாநந்தர் பிறந்தார்.
இவரது
தாயார் பெயர் கண்ணம்மை
தந்தையாரின் பெயர் சாமித்தம்பி என்பதாகும்.
சுவாமி விபுலாநந்தருக்கு அவரது தாய் தந்தையர் இட்ட பெயர் மயில்வாகனம் என்பதாகும்.
மயில்வாகனனாருக்கு எழுத்தறிவித்த ஆசிரியர் திரு. க. குஞ்சித்தம்பி என்பவராவார்.
இவர் தமது ஒன்பதாவது வயதில் கல்முனையிலுள்ள மெதடிஸ்த பாடசாலையிலும் மட்டக் களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றார், பின்னர் மட்டக்களப்பிலுள்ள சென். மைக்கேல் கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.
இவரது அடக்கமும் ஆர்வமும் தாய் தந்தையரை மகிழ்ச்சியடையச் செய்தது.
பள்ளிக் கூடத்திலும் வீட்டிலும் பாடங்களை ஒழுங்காகப் படித்தார். ஆசிரியரிடம் நல்ல பெயரையும் பெற்றார்.
'பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவந்த
மக்கட் பேறல்ல பிற”
COMMENTS